பொலிசாரே இல்லாத ஒரு கிராமம்... செவிலியருக்கு நேர்ந்த பரிதாப முடிவு
தென் அவுஸ்திரேலிய பாலைவனப்பகுதியில் உள்ளது Fregon என்ற நகரம். சரியான போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த பகுதியில் செவிலியராக சேவை செய்துவந்துள்ளார் Gayle Woodford (56) என்ற பெண்.
ஒரு நாள் பணிக்குச் செல்லும்போது அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று வன்புணர்ந்து கொலை செய்து ஓரிடத்தில் புதைத்துவிட்டார் அந்த பகுதியில் வாழும் ஒருவர்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரியான Anthony Schapel, தன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள Dudley Davey (34) தான் Gayleஐ கொலை செய்துள்ளார் என்பதுடன், அந்த பகுதியில் பொலிசாரே இல்லை என்றும், அங்கு பொலிசார் நியமிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார் அவர்.
குற்றவாளியான Davey, கடந்த 20 ஆண்டுகளாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்துள்ளார்.
இப்படி ஒரு குற்றவாளி, எப்படி பொலிசாரின் மேற்பார்வை இல்லாத ஒரு இடத்தில் நடமாட அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார் விசாரணை அதிகாரியான Anthony.
விசாரணையின்போது சாட்சியமளித்த அனைவருமே, அந்த பகுதியில் நிரந்தரமாக பொலிசார் பணியில் நியமிக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளதாக Anthony தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட Gayleஇன் கணவரான Keith Woodford, தங்கள் குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என்றும், Davey செய்த கொடுஞ்செயலுக்கு, அவரை சிறையிலிருந்து விடுவிக்கவே கூடாது என்றும் கூறியுள்ளார்.