இளவரசர் ஹரியால் மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவா? அரண்மனை விளக்கம்
இளவரசர் ஹரி சமீபத்தில் பிரித்தானியா வந்து மன்னர் சார்லசை சந்தித்ததைத் தொடர்ந்து, மன்னருக்கும் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் இடையில் பிளவு உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவா?
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை தன்னுடன் தேநீர் அருந்த வருமாறு மன்னர் சார்லஸ் அழைத்திருந்தார்.
சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் சுமார் ஒருமணி நேரம் அளவளாவிக்கொண்டார்கள்.
இந்நிலையில், இளவரசர் ஹரி, தான் மன்னர் சார்லசை சந்தித்ததை, மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்னும் அச்சம் உருவாகியுள்ளதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அரண்மனை விளக்கம்
இந்நிலையில், அந்த செய்தி தொடர்பில் அரண்மனை வட்டாரம் விளக்கமளித்துள்ளது.
இதனால்தான் மன்னரும் ராஜ குடும்பமும், ஹரி மற்றும் அவரது மனைவியை சந்திக்க இவ்வளவு தயக்கம் காட்டிவருகிறார்கள் என்று கூறியுள்ள அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், அவர்களை சந்திப்பது நம்பிக்கையையும் நல்லுறவையும் உருவாக்குவதற்கு பதிலாக அதற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்கிறார்.
மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவு என்னும் செய்தியை மறுத்த அவர், மாறாக, நவயுக ராஜ குடும்பத்தின் வலிமையும் தாக்கமும் மன்னர் மற்றும் இளவரசர் வில்லியமுக்கு இடையிலான அசைக்கமுடியாத பிணைப்பில்தான் உள்ளது என்பதை கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா வந்தபோது நடந்த விடயங்கள் தெளிவாகக் காட்டின. அதற்கு ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ஆதரவாக உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |