இன்ஸ்டாகிராம் காதல்... இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயர முடிவு
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, இன்ஸ்டாகிராமில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.
நட்பு காதலாக, தன் ஊரை விட்டு விட்டு, தன் காதலர் வீட்டுக்கே வந்துவிட்டார் அந்தப்பெண்.
இன்ஸ்டாகிராம் காதல்...
கோண்டியா என்னுமிடத்தைச் சேர்ந்த அஷ்ரஃபா என்னும் சியா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை விட்டு, மத்தியப்பிரதேசத்தின் போபாலில் வாழும் சமீர் என்னும் தன் காதலர் வீட்டுக்கு வந்தபோதுதான் அவருக்கு அந்த உண்மை தெரியவந்தது.

ஆம், சமீர் ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
மூன்று மாதங்களாக சியா சமீரின் வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில், அவருக்கும் சமீருடைய மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும், சத்தமாக வாக்குவாதம் நடக்கும் என்கிறார்கள் அக்கம்பக்கத்தவர்கள்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை வழக்கம்போல, இருவருக்கும் சண்டை வந்துள்ளது.
ஆத்திரத்தில் சமீர் சியாவின் கழுத்தை நெறிக்க, அவர் உயிரிழந்துள்ளார். உடனே, தன் சகோதரர், சகோதரி மற்றும் தாய் உதவியுடன், சியாவின் உடலை ஒரு இரும்புப் பெட்டியில் அடைத்து, அருகிலுள்ள தண்ணீர்த்தொட்டி ஒன்றில் வீசியுள்ளார் சமீர்.
வியாழக்கிழமை, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் ஏதோ துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்து பெரியவர்களுக்குச் சொல்ல, பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்போது தண்ணீர்த்தொட்டி ஒன்றிற்குள் கிடந்த இரும்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதற்குள் சியாவின் உடல் இருக்க, விசாரணையில் சமீர் அவரைக் கொன்றது தெரியவர, பொலிசார் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
ஆனால், சமீர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவருடைய தாய், சகோதரர் மற்றும் சகோதரியை கைது செய்துள்ளார்கள்.
இன்ஸ்டாகிராம் காதலால் தன் வாழ்வையே இழந்துவிட்டார் சியா!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |