பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ப்ளூ டிக் பெற இனி கட்டணம்: மெட்டா-வின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி
ட்விட்டர் போல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் அங்கீகரிப்பட்ட கணக்குகளுக்கான குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11.99 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் அறிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கான நீல வண்ண குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கான நீல வண்ண அடையாளத்தை கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
கட்டணங்கள்
இந்த அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளின் மாதக் கட்டணமாக 11.99 டாலர்களும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் 14.99 டாலர்களும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இந்த வாரம் முதல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அமுலுக்கு வர உள்ளது, மேலும் மற்ற நாடுகளில் இந்த நடைமுறை விரைவில் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NurPhoto/Getty Images
கட்டணம் செலுத்துபவரின் பதிவுகள் பார்ப்பதற்கு தெளிவாக இருப்பதுடன், ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு ஆவணங்களில் இருப்பதை போன்று, பயன்பாட்டாளர்கள் பெயரை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.