விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுவா?

Vijay Instagram TVK
By Sivaraj May 05, 2026 01:35 PM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியில் இன்ஸ்டாகிராம் பங்காற்றியதை அரசியல் நிபுணர்கள் கவனித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மேடைப்பேச்சுகள், போஸ்டர்கள், தெருமுனை கூட்டங்கள் பாணியில் பிரச்சார உத்திகளை கையாள்வது வழக்கம்.

ஆனால், 2026 சட்டசபை தேர்தலில் தவெக தரப்பில் இளம் தலைமுறை கையில் எடுத்ததோ செல்போன் செயலி.

ஆம், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புதிய அலையை தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.

Virtual ஆயுதம் என்று கூறப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலில், தவெக சார்பு இளைஞர்கள் தங்களது அரசியலை பேசி, டிஜிட்டல் பரப்புரையும் செய்தனர். இது ஒட்டுமொத்த இளைஞர்கள் இடையேயும் அரசியல் ஆர்வத்தையும், புரிதலையும் தூண்டியது.

குறிப்பாக 18 முதல் 25 வயது இளைஞர்கள் (Gen Z Kids) தங்களது தனி உலகமாக கருதும் இன்ஸ்டாகிராமில் அரசியல் பேசினர்.

இந்த செயலில் உள்ள ரீல்ஸ் கலாச்சாரம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.

ஒரு நிமிட ரீல்ஸ் மூலமாக உலக நடப்புகளை தெரிந்து கொள்ளும் இந்த தலைமுறையிடம் நீண்ட பேச்சு என்பது எடுபடாது என்பதை தவெக மிக சரியாக கணித்தது.

கருத்துருவாக்க கருவியாக மாறிவிட்ட இன்ஸ்டாகிராமினை தமிழக வெற்றிக் கழகம் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. பேஸ்புக் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகம் என்ற தளமாக அறியப்பட்டது.

ஆனால், தற்போது Gen Z இளைஞர்களைப் பொறுத்தவரை பேஸ்புக் வயதானவர்கள் பயன்படுத்தும் தளம்; எக்ஸ் தளம் என்பது அரசியல் விவாத தளமாக மாறிவிட்டது. ஆகையால் இன்ஸ்டாகிராம் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளோடு இணைந்த தளமாக உள்ளது.

அதனால், வீட்டில் இருக்கும் பெற்றோரிடம் 'இம்முறை விஜய்க்கு வாக்களியுங்கள்' என்று வற்புறுத்தும் சக்தியாக இளைஞர்கள் மாறினர். சிறுவர், சிறுமியர்களும் தங்கள் வீட்டு பெரியவர்களிடம் மன்றாடும் காணொளிகளும் வெளியாகின.

இதுவே தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் ஒருவர் ஒருமுறை விஜய்யின் வீடியோவைப் பார்த்தால், Instagram Algorithm அவருக்குத் தொடர்ந்து தவெக தொடர்பான செய்திகளையே காட்டும்.

இது மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும் என்றாலும், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டது தவெக. இளைஞர்களை அரசியல் பக்கம் திருப்பி, வாக்களிக்க வைத்து மாபெரும் வெற்றியை தமிழக வெற்றிக் கழகம் அறுவடை செய்துள்ளது.

எதிர்காலத்திலும், சமூக வலைதளங்களை இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே பெரிய கட்சிகளால் இளைஞர் வாக்குகளை வசப்படுத்த முடியும் என்ற நிலையும் உருவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத கூற்றாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US