திருமணமான சில நாட்களிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல்.
27 வயதாகும் இன்ஸ்டா பிரபலம் ராகுலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றன.
நகைச்சுவையாகவும், வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து அனைவரையும் மகிழ்வித்து வந்தார்.
ராகுல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகர் சேர்ந்த வேலுமணி என்பவரது மகளை திருமணம் செய்தார்.
இந்நிலையில், ராகுல் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது விலையுயர்ந்த பல்சர் RS200 பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராகுல் தூக்கி வீசப்பட்டு, அவர் ஓட்டிச்சென்ற பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
இதில், ராகுல் தலையில் பலத்த காயமந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |