இன்ஸ்டாகிராம் பிரபலம் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு..உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்
சென்னையில் மனைவியை கொன்றுவிட்டு கணவரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலம்
இன்ஸ்டாகிராமில் புடவைகளை எளிதாக கட்டும் வகையில், ரெடிமேடாக மாற்றித் தரும் பணியை செய்து வந்தவர் நாகலட்சுமி.

42 வயதான இவர், சென்னை நங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது கணவர் சுப்ரமணியன் (52) மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
மேலும், நாகலட்சுமியை அடித்து பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மனைவியை கொன்ற கணவன்
இந்த நிலையில், நேற்றைய தினம் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு பெரிதாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுப்ரமணியன் மனைவி நாகலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தம்பதிக்கு மருத்துவம் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |