ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி! ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள்
ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தள செயலியை, இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமின் புதிய செயலி
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் இருந்த சமயத்தில், ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
@meta
இதனால் ட்விட்டரை பயன்படுத்துவதில் பயனர்கள் தற்போது நிறைய சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ள இந்த புதிய செயலி பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக டெக்ஸ்டை மையமாக வைத்து, புதிய சமூக வலைதள பக்கத்தை அறிமுகம் செய்ய உ ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
இதில் புகைப்படம், வீடியோ மற்றும் லிங்க்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய செயலியில் பயனர்கள் 1500 வார்த்தைகள் மேல் தட்டச்சு செய்து பதிவுகளை வெளியிட முடியு என கூறப்படுகிறது.
@reuters
மேலும் இந்த புதிய செயலி மெட்டா நிறுவனத்தின் மூலமாக சூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.