15 வயது சிறுவனை காதலிக்கும் 35 வயது பிரித்தானிய பெண்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
லண்டனில் 15 சிறுவனை காதலிக்கும்படி வலுக்கட்டாயமாக டார்ச்சர் செய்த பெண்ணை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள East Sussex பகுதியை சேர்ந்தவர் Carol Taylor(35). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுவன் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த சிறுவனிடம் தினமும் Carol பேசி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேரில் பார்க்க வேண்டும் என்றும் Carol தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார். Carol கூறிய இடத்திற்கு அவரைப் பார்க்க வேண்டி சிறுவனும் சென்றுள்ளான்.
அப்போது அந்த சிறுவனிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிறுவனை Carol எச்சரித்துள்ளார்.
அந்த சிறுவனை மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து Carol மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர் சிறுவனை ஏமாற்றி சோசியல் மீடியாவில் 100க்கும் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        