ஆபாச இணையதளத்தில் தன் புகைப்படத்தைக் கண்டு அதிர்ந்த கனேடிய இளம்பெண்: ஒரு எச்சரிக்கை செய்தி
கனேடிய இளம்பெண் ஒருவருடைய நண்பர்கள், அவருடைய பெயரில் ஆபாச இணையதள கணக்கு ஒன்று இருப்பதைக் குறித்து விசாரித்தபோதுதான் அவருக்கு விடயமே தெரியவந்தது.
வின்னிபெக்கைச் சேர்ந்த Holly St. Pierreவின் பெயரில் யாரோ ஒருவர் போலியாக ஒரு கணக்கை ஆரம்பித்து, பணம் கொடுத்தால் Hollyயின் ஆபாச வீடியோக்களைப் பார்க்கலாம் என விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
அந்த இணைப்பைத் திறந்து பார்த்தால், அதில் யாரோ ஒரு பெண்ணுடைய ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
ஆக, Hollyயின் புகைப்படத்தையும் கணக்கையும் பயன்படுத்தி அவரைப் பின்தொடர்பவர்களை இலக்கு வைத்து பணம் பார்க்க யாரோ இந்த வேலையைச் செய்திருந்தது தெரியவந்தது.
Hollyயைப் போலவே, இதே மாதிரி ஒரு சிக்கலில் Andrea Bose என்னும் முன்னாள் மொடலும் சிக்கியிருக்கிறார்.
ஆக, யாரோ ஒரு பெண்ணுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவர்களுடைய ஆபாச வீடியோக்களைப் பார்க்கலாம் என்று ஆசை காட்டி, அவரைப் பின்தொடர்பவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டும் நடந்தது இன்ஸ்டாகிராமில்...
ஆக, இதுபோன்ற மோசடிகள் இணையத்தில் நடப்பதால், சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிடுவோர் தங்கள் கணக்குகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருப்பது நல்லது.
இன்னமும் Hollyயின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட அவருக்கு அறிமுகமானவர்கள் அந்தப் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை, அது Hollyயின் சமூக ஊடகக் கணக்கு என்றே நம்பி அதைப் பின் தொடர்கிறார்களாம்.
அது எனக்கே தலைகுனிவாகத்தான் இருக்கிறது என்கிறார் Holly.
இன்று, தன் கணக்கை எல்லாரும் அணுக முடியாத வகையில், private என மாற்றிவிட்டதாக தெரிவிக்கிறார் Holly.
சமூக ஊடகக் கணக்குகள் வைத்திருப்போர் இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள, இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது நல்லது.