இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் புதிய வசதி: இந்தியாவில் எப்போது அறிமுகம்
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ரீல்ஸை பதிவிறக்கம் செய்யும் புதிய வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
தற்போது உள்ள சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகமாக இன்ஸ்டாகிராம் உள்ளது.
இதில் புதிய புதிய ஐடியாக்கள் மற்றும் பொழுதுபோக்கான உள்ளடக்கங்கள் நிறைந்த வீடியோக்கள் மிக எளிதாக அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதுடன் சில நேரங்களில் அதற்கான வெகுமதிகளையும் பயனர்களுக்கு பெற்றுத் தருகிறது.
இத்தகைய தனித்துவமான உள்ளடங்களை உரிமையாளருக்கு மட்டும் உரியதானதாக வைத்து இருக்கும் முயற்சியில் இதில் பகிரப்படும் போட்டோ மட்டும் வீடியோக்களை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி அமெரிக்காவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியாவில் அறிமுகம்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறை விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் மூலம் டவுன்லோடு செய்யப்படும் வீடியோக்கள் நேரடியாக பயனர்களின் செல்போன்களின் Gallery-ல் save ஆகும் என தெரியவந்துள்ளது..
மேலும் பயனர்கள் தாங்கள் பதிவிடும் வீடியோக்களை யாரெல்லாம் டவுன்லோடு செய்யலாம் என்பதை privacy setting ஆப்ஷன் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.