இனி இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர் வாங்கலாம் - இணைப்பு கூட தேவையில்லை
HPCL நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர் டெலிவரி சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர்
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர்களையும் டெலிவரி செய்ய உள்ளது.
10 கிலோ ஹெச்பி நவ்யா சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் இதில் கிடைக்கும்.
நாவ்யா சிலிண்டர் வழக்கமான சிலிண்டர்களை விட எடை குறைவானது மற்றும் பயனர்கள் மீதமுள்ள எரிவாயு அளவைச் சரிபார்க்க உதவும் ஒளிபுகும் அமைப்பைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் சிலிண்டர் வாங்க ஏற்கனேவே வீட்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இன்ஸ்டாமார்ட் செயலி மூலம், 10 கிலோ ஹெச்பி நவ்யா அல்லது 5 கிலோ சிலிண்டரை ஆர்டர் செய்யலாம். இந்த ஆர்டர்கள் HPCL-இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நெட்வொர்க் மூலம் நிறைவேற்றப்பட்டு, பயிற்சி பெற்ற ஊழியர்களால் டெலிவரி செய்யப்படும்.

முதல்முறை வாங்கும் பொது மட்டும் அடையாளச் சரிபார்ப்பு இருக்கும். மற்றும் டெலிவரி செய்யப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் வழங்கப்படும்.
அடுத்து ஒவ்வொரு முறையும் உங்கள் காலியான சிலிண்டரை கொடுத்து புதிய சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.
முதற்கட்டமாக, பெங்களூருவில் இந்த சேவையை தொடங்கியுள்ளது. எதிர்வரும் நாட்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்த திட்டம், சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |