Instant Appam: இந்த ஒரு மா இருந்தால் போதும்.., 30 நிமிடத்தில் ஆப்பம் செய்யலாம்
ஆப்பம் என்றாலே வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு.
ஆனால், இதற்காக மா அரைத்து புளிக்க வைத்து ஆப்பம் செய்வதற்குள் போதும்போதும் என்று ஆகிவிடும்.
அந்தவகையில், மா அரைக்காமலேயே உடனடி ஆப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி மா- 2 கப்
- சாதம்- ½ கப்
- தேங்காய்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- ஈஸ்ட்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மா மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பவுலில் 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வடித்த சாதம், துருவிய தேங்காய், ஈஸ்ட் கலந்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கலந்து வைத்த பச்சரிசி மாவுடன் அரைத்த கலவையை சேர்த்து மூடி போட்டு 3 மணி நேரம் அப்படியே விடவும்.
இறுதியாக, மா நன்கு பொங்கி வந்ததும் அதை கலந்து ஆப்பம் போல் ஊற்றி எடுத்தால் சுவையான ஆப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |