Instant Dosa: மாவு அரைக்க தேவையில்லை.., 5 நிமிடத்தில் மொறுமொறு தோசை செய்யலாம்
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை போன்ற பல வகை உண்டு.
அந்தவகையில், மாவு அரைக்காமலேயே 5 நிமிடத்தில் உடனடி மொறுமொறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- அவல்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 2 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ரவை மற்றும் அவலை தனித்தனியாக 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய ரவை, அவலை தண்ணியில்லாமல் வடித்து சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் தயிர், உப்பு, பேக்கிங் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக தவாவை அடுப்பில் வைத்து தோசை போல் ஊற்றி எடுத்தால் சுவையான மொறுமொறு தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |