அரிசி மாவு வைத்து மொறுமொறு மெதுவடை.., வெறும் 15 நிமிடத்தில் செய்யலாம்
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், 15 நிமிடத்தில் அரிசி மாவு வைத்து மொறுமொறு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி மா- 1 கப்
- மோர்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 3
- சீரகம்- ½ ஸ்பூன்
- கறிவேப்பைலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- வெங்காயம்- 1
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பச்சரிசி மா, மோர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அந்த வாணலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறினால் நன்கு கெட்டியாகி வரும்.
அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.
பின்னர் சூடு ஆறியதும் இதை வடை போல் தட்டி வைக்கவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடையை பொறித்து எடுத்தால் மொறுமொறு மெதுவடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |