Instant Naan: நாவூறும் சுவையில் நாண்.., இலகுவாக செய்வது எப்படி?
பொதுவாக அனைவருக்கும் ஹொட்டலுக்கு சென்றால் நாண் ரொட்டி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இனி வீட்டிலேயே சுவையான நாண் ரொட்டியை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 1 கப்
- பால்- ½ கப்
- தயிர்- ½ கப்
- பால் பவுடர்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ½ ஸ்பூன்
- பேக்கிங் பவுடர்- ½ ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- எள்ளு- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- வெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பால், தயிர், பால் பவுடர், சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், எண்ணெய் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்துகொள்ளவும்.
அடுத்து இதனை மூடி போட்டு 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
அதன் பிறகு மாவை சிறிய சிறிய உருண்டையாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மாவை வட்டமாக திரட்டி அதன்மேல் எள்ளு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக தவாவில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து அதன் மேல் வெண்ணெய் சேர்த்தால் சுவையான நாண் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |