Instant Parotta: இனி பரோட்டாவிற்கு மாவு பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் செய்யலாம்
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
பரோட்டா செய்வதற்கு மாவு பிசைவது என்பது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இனி அந்த கவலை வேண்டாம்.
மாவு பிசையாமலையே மென்மையான பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- தண்ணீர்- 2 கப்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- உப்பு- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மைதா, தண்ணீர், சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தோசை மாவு போல் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவை ஒரு முக்கோண வடிவ கவரில் ஊற்றி அந்த கவரின் அடியில் கத்திரிக்கோல் கொண்டு சிறிய ஓட்டை விழும்படி வெட்டிக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் முக்கோண கவரில் ஊற்றி வைத்த மாவை வட்டமாக பிழிந்து விட்டு வேகவைக்கவும்.
பின் இதில் எண்ணெய் ஊற்றி நன்கு வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
இதைபோல் கரைத்துவைத்திருந்த அனைத்து மாவையும் தவாவில் ஊற்றி வேகவைத்து எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் சுவையான பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |