Instant Idli: ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் இட்லி செய்யலாம்
பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும்.
இட்லி, தோசையை செய்வது சுலபம் தான், ஆனால் அதற்கு மாவு தயார் செய்வது தான் கடினமானதாகும்.
அந்தவகையில், ஒரு கப் ரவை வைத்து 10 நிமிடத்தில் பூப்போல இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- 2 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- முந்திரி- 1½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- சீரகம்- ¼ ஸ்பூன்
- கடுகு- ¼ ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகு- ½ ஸ்பூன்
- ரவை- 1 கப்
- தயிர்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- பேக்கிங் சோடா- ¼ ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், மிளகு சேர்த்து பொரிக்கவும்.
பின் அதில் நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் ரவை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி பின் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதை ஒரு பவுலில் மாற்றி அதில் தயிர், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு மற்றும் பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
இறுதியாக இதை ஒரு இட்லி பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் பூப்போல ரவை இட்லி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |