இந்த ஒரு மா இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் Instant உளுந்தங்கஞ்சி செய்யலாம்
அந்தக் காலங்களில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான காலை உணவு ரெசிபிகளில் உளுந்தங்கஞ்சியும் ஒன்றாகும்.
பெண்களுக்கு பருவமடையும் போது கொடுக்கப்படுகிறது, ஏனெனில் இந்தக் கஞ்சி எலும்பு மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றை பலப்படுத்துகிறது.
உளுத்து கஞ்சியை குளிர்காலத்தில் காலை உணவு சாப்பிடுவது நன்றாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை உளுந்து- 1 கப்
- கருப்பு உளுந்து- 1 கப்
- பச்சரிசி- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- தேங்காய் பால்- ½ கப்
- சுக்கு பொடி- ¼ ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வெள்ளை உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கருப்பு உளுந்து சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் பச்சரிசி சேர்த்து பொரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இவையனைத்தும் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு சின்ன பவுலில் 1 கப் தண்ணீர் சேர்த்து 2 ஸ்பூன் அரைத்த்த மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் கரைத்து வைத்த மாவை ஊற்றி வேகவைக்கவும்.
நன்கு வெந்து கெட்டியாகி வந்ததும் அதில் வெல்லப்பாகு, சுக்கு பொடி, ஏலக்காய் தூள், தேங்காய் பால் சேர்த்து கலந்து உடனே இறக்கி பரிமாறினால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |