Instant Uttapam: மாவு அரைக்க தேவையில்லை.., 15 நிமிடத்தில் ஊத்தப்பம் செய்யலாம்
ஊத்தப்பம் என்பது ஒரு தென்னிந்திய உணவு வகை.
அந்தவகையில், மாவு அரைக்காமலேயே ரவை வைத்து உடனடியாக ஊத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- சாதம்- ½ கப்
- தயிர்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- ¼ ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- கேரட்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, சாதம், தயிர், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தும் கடலை பருப்பு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து இதில் பெருங்காயம், துருவிய கேரட் சேர்த்து வதங்கியதும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் தவா வைத்து சூடானதும் கரைத்த மாவை ஊற்றி அதன் மேல் வதக்கி கலவை வைத்து கொத்தமல்லி தூவவும்.
இறுதியாக ஊத்தப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்து வந்ததும் எடுத்தால் சுவையான ரவை ஊத்தப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |