Instant Vada: ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., மொறுமொறு வடை செய்யலாம்
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், 10 நிமிடத்தில் ரவை வைத்து மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- தயிர்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகு- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு சேர்த்து பிசைந்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொதமல்லி, இடித்த மிளகு சேர்த்து கிளறவும்.
அடுத்து பிணைந்த மாவை வடை போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுத்தால் ரவை வைத்து மொறுமொறு வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |