ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்
By Yashini
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், 10 நிமிடத்தில் ரவை வைத்து மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட் தூள்- 2 கப்
- ரவை- ¼ கிலோ
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- வெங்காயம்- 2
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- மிளகாய் தூள்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 1 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பத்திரத்தில் பிரட் தூள், ரவை, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் சிறிது சிறிதாக தயிர் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்துகொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
இதற்கடுத்து கலந்து வைத்த மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US