அருமையான சுவையில் Instant வத்தக்குழம்பு பொடி: இனி ஒரே நிமிடத்தில் குழம்பு செய்துவிடலாம்
வத்தக்குழம்பு அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு. வீட்டில் செய்வதை விடவும் கல்யாண பந்தியில், ஹோட்டலில் பரிமாறப்படும் வத்தக்குழம்பு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில் இந்த Instant வத்தக்குழம்பு பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் வேண்டும்போதெல்லாம் ஒரே நிமிடத்தில் செய்து சாப்பிடலாம்.
இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் வத்தக்குழம்பு பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான வத்தக்குழம்பு தயார்.
தேவையான பொருட்கள்
- மல்லி- 100 கிராம்
- கடலை பருப்பு- 50 கிராம்
- துவரம் பருப்பு- 50 கிராம்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- வெள்ளை எள்- 1 ஸ்பூன்
- வர மிளகாய்- 15
- புளி- 20 கிராம்
- உப்பு- தேவையான அளவு
- வெல்லம்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன்
- கடுகு- ¼ ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- மணத்தன்னாளி வத்தல்- 20 கிராம்
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை
வர மல்லி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், சோம்பு, மிளகு, வெள்ளை எள், வர மிளகாய், புளி ஆகிய அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வறுக்க வேண்டும்.
அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அதைத்தையும் சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள் என அனைத்தும் சேர்த்து, ஒரு காய்ந்த மிக்ஸிஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பின் சலித்து, சலித்து, மீண்டும், மீண்டும் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் கடுகு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து இந்த பொடியில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து 6 மாதங்கள் வரை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |