செல்போன் அடிக்கடி Hang ஆகி எரிச்சல் கொடுக்குதா? அதற்கான நிரந்திர தீர்வுக்கு இப்படி செய்யுங்கள்
செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் ஒரு விடயம்தான் செல்போன் ‘ஹேங்’ ஆவது.
செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க என்ன செய்யலாம்?
இந்த பிரச்சிrனை ஆண்டிராய்டு போன்களில் சகஜமான ஒன்றுதான். ஏன் கம்ப்யூட்டர்கள் கூட ஒருசில நேரங்களில் ஹேங் ஆவது உண்டு. இருந்த போதிலும், நாம் அனைவரும் பல நேரங்களில் அவசர நிலையில் தான் இருப்போம்.
ஆனால் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை அவசர காலத்தில் கேட்காமல், சரியான நேரம் பார்த்து திடீரென ஹேங் ஆகி விடும்.
இதனால் கோபத்துக்கு உள்ளாகும் நாம் செல்போனை திட்டியதும் உண்டு, இன்னும் ஒருசிலர் தூக்கி வீசியவர்களும் நம்மில் இருக்க தான் செய்கிறார்கள். இப்படி ‘ஹேங்’ ஆகும் மொபைல்களை எப்படி பழையபடி வேமாக செயல்பட வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
செல்போனில் தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை முதலில் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வாறு எந்த ஆப்களை நாம் அன் இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதில் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை போர்ஸ் ஸ்டாப் ( Force stop) கொடுக்க வேண்டும்.
2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேட்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்து கொள்வது முக்கியம்.
ஒருமுறைக்கு 2 முறை பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா என சோதித்து பார்த்து விட்டு ரீசெட் செய்திட வேண்டும். 3 நாளைக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள்.
சில மொபைல்களில் மெமரி கார்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புண்டு. செல்போனில் வைரஸ் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு காரணம் செல்போனில் உள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை என்பதே ஆகும். எனவே இதற்கு மாறாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதம் ஒருமுறை ஸ்கேன் செய்து பயன்படுத்தாலம். செல்போனில் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.