அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.., அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்
எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது அமித் ஷாவுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் கண்டனம்
இந்திய மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்றார்.
இவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |