Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.., ரூ.69,000 சம்பளத்தில் புலனாய்வு துறையில் வேலை
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்
பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (IB Security Assistant/Executive) ஆகிய பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 4,987 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 285 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயதுவரம்பு
பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரப்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
புலனாய்வு துறை பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும், அரசு ஒதுக்கீட்டில் கூடுதலாக 20% சிறப்பு கொடுப்பனை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
முதல் கட்டத் தேர்வு ஆன்லைன் வழியில் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விரிவாக விடையளிக்கும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html என்ற இணைப்பில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும்.
பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவு ஆண்கள் விண்ணப்பதார்கள் ரூ.650 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் நாள்
இப்பணியிடங்களுக்கு ஜூலை 26ஆம் திகதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |