அணியை மீட்டெடுத்த மெஸ்ஸி! ராஜநடைபோட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இன்டர் மியாமி
U.S ஓபன் கோப்பை தொடரின் அரையிறுதியில் இன்டர் மியாமி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப்போட்டி
TQL மைதானத்தில் இன்டர் மியாமி மற்றும் சின்சினாட்டி அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடந்தது.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் இறுதிவரை ஆட்டம் பரபரப்பாக சென்றது. 18வது நிமிடத்திலேயே சின்சினாட்டி (லூசியானோ அகஸ்டா) கோல் அடிக்க, முதல் பாதியில் அந்த அணி முன்னிலை வகித்தது.
Otro más de Leo para Leo en el minuto 97! ?? pic.twitter.com/5n5JMsjS1T
— Inter Miami CF (@InterMiamiCF) August 24, 2023
சீறிய இன்டர் மியாமி
இரண்டாம் பாதியின் 53வது நிமிடத்தில் சின்சினாட்டி வீரர் பிரண்டன் வஸ்யூஸ் மிரட்டலாக கோல் அடித்தார். அதன் பின்னர் இன்டர் மியாமிக்கு 68வது நிமிடத்தில் தான் முதல் கோல் கிடைத்தது.
லியானார்டோ கேம்பனா அசத்தலாக அந்த கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து 93வது நிமிடத்தில் மார்டினஸ் மூலம் மியாமிக்கு ஒரு கோல் கிடைத்தது.
மெஸ்ஸி அபாரமான பாஸ்
மேலும் கூடுதல் நேரத்தின் 7வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த ஷாட்டை லியானார்டோ கோலாக மாற்றினார். இதற்கு பதிலடியாக சின்சினாட்டியின் யூயா குபோ 114வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இறுதியில் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. பின்னர் நடந்த பெனால்டிஷூட் அவுட் முறையில் இன்டர் மியாமி அணி 5-4 என்ற கணக்கில் சின்சினாட்டி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மெஸ்ஸி கோல் (பெனால்டிஷூட் தவிர) அடிக்கவில்லை என்றாலும் அணிக்கு பாஸ் செய்து அவர் உதவியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |