இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அணி படுதோல்வி! வெடித்த சண்டை.. கொண்டாட்டங்கள் நிறுத்தம்
லீக்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி படுதோல்வியடைந்தது.
ரொஸாரியோ அடித்த கோல்
லூமென் ஃபீல்டு மைதானத்தில் நடந்த லீக்ஸ் இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி மற்றும் சியாட்டில் சௌண்டர்ஸ் அணிகள் மோதின.
Lumen Field is roaring in #LeaguesCup2025 Final 🏟️ pic.twitter.com/Ar3nj4ZaDA
— Leagues Cup (@LeaguesCup) September 1, 2025
ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் சியாட்டில் வீரர் ஒஸாசி டி ரொஸாரியோ கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க இன்டர் மியாமி வீரர்கள் தடுமாறினர்.
இரண்டாம் பாதியிலும் சியாட்டில் வீரர்கள் சிறப்பாக செயல்பட, அலெக்ஸ் ரோல்டன் (84வது நிமிடம்) மற்றும் பால் ரோத்ராக் (89வது நிமிடம்) ஆகியோர் மூலம் 2 கோல்கள் கிடைத்தன.
மெஸ்ஸி இருந்தும் கடைசி வரை இன்டர் மியாமியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், 0-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.
இதற்கிடையில், இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சுவாரஸின் வன்முறைச் செயல் மைதானத்தின் நடுவில் ஒரு சண்டையைத் தூண்டியது. இதன் காரணமாக, கொண்டாட்டங்கள் நடுவில் நிறுத்தப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |