ரூ.5 லட்சம் வரை Interest Free Loan.., வட்டி இல்லாமல் கடன் வழங்கும் பெண்களுக்கான திட்டம்
பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவியை இந்திய அரசு வழங்குகிறது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வட்டியில்லா கடன்
பெண்களுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் பெண்கள் சுய தொழில் புரிவதற்கும், அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதற்கும் இந்திய அரசு வட்டியில்லா கடனை வழங்குகிறது.
அந்தவகையில், லக்பதி திதி (Lakhpati Didi ) திட்டம் மூலம் 3 கோடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதை இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டம் மூலம், தொழில் செய்ய பெண்களுக்கு அரசு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி லக்பதி திதி யோஜனா (Lakhpati Didi Yojana) திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும், அவர்கள் தொழில் தொடங்க உதவுவதும் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற, பெண்கள் சுயஉதவிக்குழுவில் சேர வேண்டும்.
இந்த திட்டம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. லக்பதி திதி திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்பெற, சுயஉதவி குழுவில் சேர வேண்டியது அவசியம்.
இந்த குழுவில் உள்ள பெண்களுக்கு அரசு மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அப்போது, பயிற்சியின் போது பெண்களின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், சுயஉதவி குழுவில் சேர்ந்த பிறகு, பெண் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
அதன்பின், அந்த தொழில் திட்டம் சுயஉதவிக்குழு மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அதன்பின், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |