வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்திற்கும் மேல்! Post Office -ன் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் Post Office -ன் முக்கியமான திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அஞ்சலக மூத்தக் குடிமக்கள் திட்டம் (Senior Citizen Savings Scheme)
ஓய்வூதிய திட்டமிடல் நிதி சுதந்திரத்தை தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒருவர் தொடங்கும் போது பின்னாட்களில் அவருக்கு நிதி பிரச்சனை வராது. ஏனெனில் அப்போது அவர்களுக்கு வட்டியும் கிடைக்கும்.
அதற்கு அவர்கள் அஞ்சலக மூத்தக் குடிமக்கள் (Senior Citizen Savings Scheme) திட்டத்தை தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் நல்ல தொகையை பெறலாம். இதில் ஒரு முறை முதலீடு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு வட்டி கிடைக்கும்.
முதலீடு மற்றும் முதிர்வுத்தொகை
* இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் காலாண்டு வட்டி ரூ.10,250 அல்லது ஆண்டுக்கு ரூ.41,000 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகை ரூ.7,05,000 ஆகும்.
* அதேபோல ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் காலாண்டு வட்டி ரூ.20,500 அல்லது ஆண்டுக்கு ரூ.82,000 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகை ரூ.14,10,000 ஆகும்.
* ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் காலாண்டு வட்டி ரூ.30,750 அல்லது ஆண்டுக்கு ரூ.1,23,000 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகை ரூ.21,15,000 ஆகும்.
இந்த திட்டத்தின் நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையில் deposit செய்தால் 1961ன் பிரிவு 80C-ன் பலன்களுக்குத் தகுதிபெறும்.
யாரெல்லாம் தகுதியுடைவர்கள்?
* 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்
* 55 வயதுக்கு மேற்பட்ட அல்லது 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் ஊழியர்
* 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு ஊழியர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |