மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

United Kingdom
By Balamanuvelan Jul 09, 2024 05:40 AM GMT
Report

முன்னாள் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்கைக் குறித்து வெளியான செய்திகளைவிட, அவரது மனைவியான அக்‌ஷதா மூர்த்தி குறித்து வெளியான செய்திகள் அதிகம் எனலாம், பிரித்தானிய மகாராணியாரை விட பணக்காரர் என அழைக்கப்பட்ட அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு குறித்தே ஏராளம் செய்திகள் வெளியாகியுள்ளன.

மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting Fact About Wife New Prime Minister Uk

ஆனால், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் மனைவியைக் குறித்து அதிக செய்திகள் வெளியானதில்லை. அவர் அதிகம் வெளியில் தலைகாட்டாத நிலையில், சொல்லப்போனால், இதுவரை ஸ்டார்மர் தம்பதியர் தங்கள் பிள்ளைகளின் பெயர்களைக்கூட ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டதில்லை என கூறப்படுகிறது.

மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting Fact About Wife New Prime Minister Uk

மோதலில் உருவான காதல்...

மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting Fact About Wife New Prime Minister Uk

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரைப்போலவே அவரது மனைவியும் ஒரு சட்டத்தரணி ஆவார். 2000ஆவது ஆண்டு, ஒரு முறை வழக்கு ஒன்று தொடர்பில் ஆவணங்களை தயாரித்த மற்றொரு சட்டத்தரணியை தன்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு கூறினாராம் ஸ்டார்மர்.

அந்தப் பெண் ஆவணங்கள் குறித்து விளக்கம் கொடுத்துவிட்டு, தொலைபேசியை துண்டிக்கும் முன், ’அவர் தன்னை என்ன பெரிய கொம்பன் என நினைத்துக்கொண்டிருக்கிறாரா?’ என்று முறுமுறுக்கும் குரல் தன் காதில் விழுந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஸ்டார்மர்.

அந்தப் பெண்ணின் பெயர் விக்டோரியா. பின்னர் அந்தப் பெண்ணையே ஸ்டார்மர் டேட்டிங்குக்கு அழைக்க, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போக, 2007ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting Fact About Wife New Prime Minister Uk

அதிகம் வெளியில் தலைகாட்டாத முதல் பெண்மணி

பிரதமர் ஸ்டார்மரின் மனைவியான விக்டோரியா, முன்னாள் பிரதமர் ரிஷியின் மனைவி அக்‌ஷதாவைப்போல அதிகம் வெளியில் தலைகாட்டுவதில்லை. தற்போது அவர் அரசு மருத்துவ அமைப்பான NHSஇல் சட்டத்தரணியாக (occupational health worker) பணியாற்றிவருகிறார்.

ஸ்டார்மர், விக்டோரியா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதுவரை தங்கள் பிள்ளைகளுடைய பெயர்களை பொதுஇடங்களில் தம்பதியர் குறிப்பிட்டதில்லை.

விக்டோரியா, யூத மதத்தைப் பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோதலில் உருவான காதல்... பிரித்தானியாவின் புதிய பிரதமரின் மனைவி குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting Fact About Wife New Prime Minister Uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US