பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகவும் ஓவியர்களில் மன்னர் மூன்றாம் சார்லஸும் ஒருவர்.
அவர் தான் பல்கலைக்கழக பட்டம் பெற்ற முதல் மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 8, வியாழன் அன்று மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த பிறகு, சனிக்கிழமையன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக ஆனார்.
புதிய மன்னர் என்ன செய்யவுள்ளார், எப்படி செயலாற்றவுள்ளார் என்பதை அறிய பிரித்தானிய மக்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். அவரது கடந்த கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
புதிய பிரிட்டிஷ் மன்னரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பு இங்கே:
'கிங் சார்லஸ்' என்ற பெயருடன் மூன்றாவது பிரித்தானிய மன்னர் ஆவார்
மன்னர் முதலாம் சார்லஸ் 1625-ல் தனது தந்தை முதலாம் ஜேம்ஸுக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மன்னரானார். அவரது ஆட்சியின் போது அவர் செய்த செயல்கள் அவரது பாராளுமன்றத்தை கோபப்படுத்தியது, ஆங்கில உள்நாட்டுப் போரைத் தூண்டியது, இறுதியில் 1649-ல் அவர் தூக்கிலிடப்பட்டார். கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் 1660 முதல் 1685-ல் இறக்கும் வரை இருந்தார்.
அவர்ககைத் தொடர்ந்து 'கிங் சார்லஸ்' என்ற பெயருடன் மூன்றாவது பிரித்தானிய ஆட்சியாளராக மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.
அரியணைக்காக நீண்ட காலம் பணியாற்றிய வாரிசு
நவம்பர் 14, 1948-ல் பிறந்த சார்லஸ், மன்னராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அரியணைக்கு நீண்ட காலம் பணியாற்றிய வாரிசாக இருந்தார். அதுமட்டுமின்றி கிரீடத்தை ஏற்றுக்கொண்ட மிக வயதான மன்னரும் இவர்தான்.
ஒரு நகரத்தை கட்டியுள்ளார்
இங்கிலாந்தின் டோர்செஸ்டரில் அமைந்துள்ள அந்த நகரத்தின் பெயர் பவுண்ட்பரி (Poundbury). இந்த நகரத்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் நவீன நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும் என்று விரும்பி அவரது சொந்த முயற்சியில் கட்டியெழுப்பினார்.
விவாகரத்து பெற்ற முதல் சிம்மாசன வாரிசு
1996-ஆம் ஆண்டில், விவாகரத்து வழங்கப்பட்ட முதல் அரியணை வாரிசு சார்லஸ் ஆவார். அவர் லேடி டயானா ஸ்பென்சரை மணந்தார். ஒரு வருடம் கழித்து, இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் இறந்தார்.
இதன் விளைவாக, சர்ச் ஆஃப் இங்கிலாந்து மறுமண வரம்புகளிலிருந்து இளவரசர் சார்லஸுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இளவரசர் சார்லஸ் கமிலா பார்க்கர் பவுல்ஸை 2005-ல் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.
அதிகம் விற்பனையாகும் ஓவியர்
சார்லஸ் ஒரு சிறந்த ஓவியரும் கூட. உண்மையில், அவர் இங்கிலாந்தில் அதிகம் விற்பனையாகும் வாழும் ஓவியர்களில் ஒருவர்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முக்கியமாக watercolour landscape ஓவியங்களை உருவாக்குகிறார். 1997 முதல் அவரது கலைப்படைப்புகளின் விற்பனை கிட்டத்தட்ட 3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது என்று People Magazine தெரிவிக்கிறது.
ஓவியங்கள் விற்ற பணத்தை சார்லஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் அறக்கட்டளைக்கு கொடுக்கிறார். அவரது லித்தோகிராஃப்கள் 3,600 டொலர் முதல் 21,000 டொலர்கள் வரை விற்கப்படலாம்..
விவசாயம் மற்றும் தோட்டக்கலை மீது காதல்
மன்னர் சார்லஸ் விவசாயம் மற்றும் தோட்டக்கலை மீது அதிக விருப்பம் கொண்டவர். அவர் தனியாக விவசாயம் செய்கிறார் மற்றும் அவருக்கு இயல்பாகவே தாவரங்களை வளர்ப்பதற்கான திறமை உள்ளது.
அவர் தனது பண்ணையில் உள்ள தாவரங்களுடன் உரையாடுவார். அவர் இயற்கை சுற்றுச்சூழலை மிகவும் நேசிக்கிறார். அவர் நெறிமுறையாக உற்பத்தி செய்யப்படும் உணவு மற்றும் பொருட்களை விநியோகிக்கும் 'டச்சி ஒரிஜினல்ஸ்' என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார் மற்றும் இயற்கை விவசாயத்தின் ஆதரவாளராக உள்ளார்.
அவர் தனது பழங்கால ஆஸ்டன் மார்ட்டின் காரை ஒயின் மூலம் தயாரிக்கப்பட்ட பயோஎத்தனால் எரிபொருளில் இயங்கும்படி மாற்றியமைத்தார்.
பல்கலைக்கழக பட்டம் பெற்ற முதல் ஆட்சியாளர்
ராணி இரண்டாம் எலிசபெத் அல்லது அவருக்கு முன் அரியணையில் இருந்த மற்ற வாரிசுகளைப் போலல்லாமல், அவர் வீட்டில் படிக்கவில்லை. உண்மையில், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டம் பெற்ற சிம்மாசனத்தின் முதல் வாரிசு ஆவார். மன்னர் மூன்றாம் சார்லஸ் 1967-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
திருமணம் ஆன பிறகு தனிப்பட்ட உறவை ஒப்புக்கொண்டவர்
பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜொனாதன் டிம்பிள்பிக்கு அளித்த பேட்டியின் போது, இளவரசி டயானாவுடனான திருமணத்தின் போது வேறு ஒருவருடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டவர் சார்லஸ்.