சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள ’விரல் வெட்டும்’ கிரிமினல் குறித்து வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்கள்
ஐரோப்பா முழுவதும் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குற்றவியலில் பட்டப்படிப்பு முடித்தவர் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த Flor Bressers (35) என்ற நபர் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 17) சூரிச்சில் கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்கள் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் ஐரோப்பா முழுவதும் தேடப்படும் ஒரு குற்றவாளி என்பதும், அவர் மீது சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிற தகவலும் சுவிஸ் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
2021 மே மாதம் முதல், பெல்ஜியம் பொலிசார் Bressersஐத் தேடி வந்துள்ளார்கள். கடத்தல், பிணைக்கைதியாக பிடித்து வைத்தல், ஆயுதங்களுடன் கொள்ளை, போதை மருந்து கடத்தல் மற்றும் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றம் ஒன்று Bressersக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தலைமறைவான Bressersக்கு பல புனைபெயர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று விரல் வெட்டுபவர் என்பது. போதைப்பொருள் கடத்தும் ஒருவரைத் தண்டிப்பதற்காக, அவரது விரலை கத்திரி ஒன்றினால் வெட்டியதற்காக Bressersக்கு அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், De Universitair என்ற பெயரிலும் Bressers அழைக்கப்படுகிறார். அதற்குக் காரணம், அவர் குற்றவியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளாராம்.