யூடியூப் தொடர்பில் வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்
முன்னணி வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.
கூகுள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இத் தளமானது வீடியோக்களை அப்லோட் செய்பவர்களுக்கு பணம் ஈட்டும் வாய்ப்பினையும் வழங்கி வருகின்றது.
இப்படியிருக்கையில் தற்போது இத் தளம் தொடர்பில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 3 வருடங்களில் வீடியோக்களை அப்லோட் செய்யும் பயனர்களுக்கு சுமார் 30 பில்லியன் டொலர்களை யூடியூப் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யூடியூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Susan Wojcicki தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் 16 பில்லியன் டொலர்கள் பங்களிப்பினை யூடியூப் செய்துள்ளது.
இந்த பெறுமதியானது 345,000 முழு நேர வேலைவாய்ப்பின் ஊடாக பெறப்படும் வருமானத்திற்கு சமனாகும்.