Tata நிறுவனம் ஒன்றில் பயிற்சி... பின்னர் அவர் உருவாக்கிய ரூ 8370 கோடி நிறுவனம்
இந்தியாவில் பலர் தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக மற்ற நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
டாடா குழும நிறுவனம்
சிலர் பெருந்தொகை சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட்டு, சொந்தமாக நிறுவனம் தொடங்கி சாதிக்கின்றனர். IIT பட்டதாரியான அரவிந்த் சங்கா என்பவரும் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து 2015ல் ஐதராபாத்தில் உருவாக்கிய நிறுவனம் தான் Rapido.
சமீபத்தில் தான் இந்த நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்ட unicorn அந்தஸ்தை கைப்பற்றியது. Rapido நிறுவனத்தை தொடங்கும் முன்னர் 2014ல் theKarrier என்ற நிறுவனத்தையும் அரவிந்த் இணைந்து நிறுவியுள்ளார்.
மட்டுமின்றி, Flipkart நிறுவனத்திலும் இவர் பணியாற்றியுள்ளார். டாடா குழும நிறுவனம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றியவர் அரவிந்த். 2012ல் IIT Bhubaneswar-ல் இருந்து B.Tech பட்டம் பெற்றுள்ளார்.
மூன்றாவது நிறுவனம்
2011ல் Tata Motors நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்துள்ளார். Rapido நிறுவனத்தின் இன்னொரு உரிமையாளரான பவன் IIT பட்டதாரி.
இந்த ஆண்டில் unicorn அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது நிறுவனம் Rapido. இதற்கு முன்னர் Krutrim மற்றும் Perfios நிறுவனங்களும் 1 பில்லியன் டொலர் சந்தை மதிப்பை எட்டியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |