நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்: சர்வதேச அமைப்புகளுக்கான உதவிகளை குறைக்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறி, சர்வதேச அமைப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவிகளை குறைக்க சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்
ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் என உலக நாடுகள் சிலவற்றில் நிழழும் போர்ச்சூழலின் தாக்கம் சுவிஸ் நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது.
இத்தகைய போர்ச்சூழலில், நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என சுவிட்சர்லாந்து கருதுகிறது.
ஆகவே, சர்வதேச அமைப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவிகளை குறைத்து, அந்த நிதியை நாட்டின் ராணுவத்துக்காக செலவிட, சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
அவ்வகையில், சர்வதேச அமைப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியில், சுமார் 250 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை குறைக்க சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |