Red-ball Redemption - ரோஹித் சர்மாவின் போஸ்டரை வெளியிட்ட ஐசிசி
Red-ball Redemption என்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்ட போஸ்டர்
வரும் ஜூன் மாதம் 7ம் தேதி லண்டனில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
இதற்காக இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஐசிசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போஸ்டர் வரையப்பட்டுள்ளது. அந்த பதிவில் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Can India go one better than the #WTC21 Final?
— ICC (@ICC) May 31, 2023
Time for Red-ball Redemption ?#WTC23 pic.twitter.com/CsEU5XDaCQ