ஒரு முத்ததில் இவ்வளவு அர்த்தமா? சர்வதேச முத்த தினம் வாழ்த்துக்கள்!
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் முத்த தினமானது கொண்டாடப்படுகின்றது. அது எப்படி இன்றைய தினம் முத்த தினமாக இருக்கும் என்று யோசிக்கின்றீர்களா?
சரி தான். பெரும்பாலும் காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக வரும், அதை தான் கொண்டாடுவார்கள். ஆனால் சர்வதேச முத்த தினம் எப்படி என்றும் முத்தில் உள்ள விடயங்கள் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
சர்வதேச முத்த தினம்
முத்தம் என்பது காமத்தினால் எற்படக்கூடியது இல்லை. ஒரு அன்பின் வெளிக்காட்டாக கூட இருக்கலாம். காதலர்கள், கணவன் மனைவி உறவுகளைக் கடந்து முத்தம் என்பது இப்போது அனைத்து விதமான உறவுகளிலும் பொதுவாகிவிட்டது.
முத்தத்தின் நன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி சமூகத்தில் உள்ளவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றே ஜூலை மாதம் 6ம் திகதி இது கொண்டாடப்படுகிறது.
முத்தத்தில் இருக்கும் வகைகள்
உலகளவில் மொத்தமாக 24 வகையான முத்தங்கள் இருகின்றது. ஒவ்வொரு இடத்தில் கொடக்கும் முத்தத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவை தொடர்ந்து வாசிக்கவும்.
கன்னத்தில் முத்தம்
கன்னத்தில் முத்தமிடுவது என்பது பொதுவான ஒரு விடமாக இருகின்றது. இரண்டு நபர்களிடையே உள்ள பாசத்தையும் நெருக்கத்தையும் இது குறிக்கிறது.
நெற்றியில் முத்தம்
பெண்களுக்கு நெற்றியில் முத்தமிட்டால் பொவாகவே பிடிக்கும். ஏனென்றால் தனது கணவரோ அல்லது காதலனோ தன்னை பாதுகாப்பாக வைத்திருகின்றார் என உணர வைப்பதற்காக என இது குறிக்கின்றது.
கைகளில் முத்தம்
இதை பொதுவாக அனைவருமே ஐரோப்பிய நாடுகளில் செய்து வருகின்றார்கள். கையில் முத்தம் கொடுப்பது மரியாதையின் அடையாளத்தை குறிக்கின்றது.
பிரஞ்சு முத்தம்
இந்த முத்தமானது பெரும்பாலும் காதலர்களுக்குள்ளும் கணவன் மனைவிகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு உணர்வாகும். . ஆழமாக ஈர்ப்பு மற்றும் காதல் கொண்டவர்களுக்கு இடையில் இந்த முத்தம் ஏற்படும். இவ்வாறு முத்தம் செய்துக்கொண்டால் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்துக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம்.
காது முத்தம்
காதில் முத்தத்தை கொடுத்தால், காதலர்களுக்கு இடையே உணர்ச்சிமிக்க சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டும். இது மிகவும் ஒரு உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும்.
கழுத்தில் முத்தம்
பெரும்பாலும் பாலுணர்வு மற்றும் உடல்மொழிக்காதல் நோக்கங்களுடன் தொடர்புடையது இந்த முத்தம். துணையின் கழுத்தில் முத்தமிடுவது தீவிர காதல் உணர்வுகளைத் தூண்டும், உடலுறவுக்கு வழிவகுக்கும் என்று குறிக்கின்றது.
மூக்கு முத்தம்
ஒருவர் தனது துணையின் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை வழிக்காட்டு வகையாக இந்த முத்தம் இருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |