கனடாவில் மீண்டும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு
தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு
அதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விதி, இம்மாதம் அமுலுக்கு வருகிறது.
CBC
கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்படி வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது மாணவர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்கிறார்கள் மாணவர்கள்.
இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ள நீவா (Neeva Phatarphekar) என்னும் மாணவி, இதுவரை வராம் ஒன்றிற்கு 40 மணி நேரம் வேலை செய்துவந்தார்.
ஏற்கனவே செலவுகளைக் குறைப்பதற்காக வேறு இரண்டு மாணவிகள் தங்கியிருக்கும் அறை ஒன்றிற்கு மூன்றாவது நபராக தான் சென்று தங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்.
Adrian Wyld/The Canadian Press
மளிகைப் பொருட்கள் வாங்குவதையும், வெளியே சாப்பிடச் செல்வதையும் தான் குறைத்துவிட்டதாகத் தெரிவிக்கும் நீவா, இப்போது வேலை செய்ய அனுமதிக்கும் நேரத்தை 24 மணி நேரமான குறைக்க அரசு எடுத்திருக்கும் முடிவு, தன்போன்ற மாணவ மாணவியரை மேலும் கடுமையாக பாதிக்கும் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |