பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
The number of international students applying to study in the UK has recorded another sharp decline: பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி.
பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் கல்வி கற்க...
2026ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 5,800 என்கின்றன பிரித்தானிய உள்துறை அலுவலக தரவுகள்.

2025ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 31 சதவிகிதம் குறைவாகும்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பித்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை, 8,400.
அதேபோல, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 349,900.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவு. ஏனென்றால், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 435,000.
ஏற்கனவே பிரித்தானியா வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துவரும் கட்டுப்பாடுகளால் பிரித்தானியாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், 2028ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதால், பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.