மீண்டும் பிரித்தானியா திரும்பும் ஹரி, மேகன் தம்பதியர்: அதிர்ச்சியில் இணையம்
Harry and Meghan’s surprise UK move shocks internet: ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த செய்தி கேட்டு இணையவாசிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியில் இணையம்
இந்நிலையில், ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ஹரி, மேகன் வாழும் அதே கலிபோர்னியாவில் வாழும் சிலர், என்ன ஹரியும் மேகனும் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறுகிறார்களா? தொல்லை ஒழிந்தது என்கிறார்கள்.
பிரித்தானியர்களில் சிலர், ஐயோ பாவம், மன்னரும் ராணியும் என்றாலும், சிலர், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மேகன் ராஜ குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கத் துவங்கியதிலிருந்தே அவரை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சரி, நான் இனி அமெரிக்காவுக்கு புலம்பெயரவேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.
I may have to emigrate to the U.S. https://t.co/HRKx7iLopr
— Piers Morgan (@piersmorgan) August 19, 2026
அரசியல் விமர்சகரான மேகம் மெக்கெயின் என்பவர், பிரித்தானியாவிலிருக்கும் நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் அமையட்டும், ஏனென்றால் இனி ஹரியும் மேகனும் உங்கள் பிரச்சினை என்று கூறியுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சகரான மைக்கேல் நோலஸ் என்பவர், மேன்மை தங்கிய மன்னர் சார்லஸ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ஊடகவியலாளரான சோபியா A நெல்சன் என்பவர், என்னால் இதை நம்பமுடியவில்லை, மேகன் அமெரிக்காவில் ஒரு அருமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளார்.
I just can't believe it. Meghan has built a wonderful
— Sophia A. Nelson (@IAmSophiaNelson) August 19, 2026
Life. Here. In California. And Hollywood. Her family. Marriage. The UK is very hateful toward her and Harry. Why subject the kids to this? Her mental health?! Yikes! https://t.co/RErw7zpvn5
பிரித்தானியா ஹரியையும் மேகனையும் வெறுக்கிறது, ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலையை பிள்ளைகளுக்கு அனுமதிக்கவேண்டும், மேகனின் மன நலன் என்ன ஆகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |