சுவிட்சர்லாந்தில் கட்டுமான ஊழியர்களால் மின்சாரம் இன்றி தவித்த 1500 குடும்பங்கள்
சுவிட்சர்லாந்தின் பாஸல் மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மின் கம்பிகளை சேதப்படுத்தியதால் 1500 குடும்பங்கள் தவித்துப்போயுள்ளது.
பாசல் மாநிலத்தில் Ulmenstrasse பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 8.30 மணியளவில் திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
சுமார் அரை மணி நேரம் வரையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து Primeo நிறுவனம் அளித்த தகவலில், பகல் 9 மணிக்கே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கட்டுமான ஊழியர்களால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனாலையே, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேதமடைந்த மின் கேபிள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக பிரைமோ எனர்ஜி தெரிவித்துள்ளது.
மேலும், தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரைமோ எனர்ஜி, மின் சாதனங்களில் உள்ள அனைத்து கடிகாரங்களையும் சரிபார்த்து, தேவைப்பட்டால் அவற்றை சரிசெய்யவும் பரிந்துரைத்தது.