கனடாவிலிருந்து ஒன்பது வயது இந்திய சிறுமி ஒருவருடன் ஒரு பேட்டி: கொரோனா யுத்தத்தில் தன் மக்களுக்காக போராடும் ஒரு குட்டிப் போராளி
பிரபல கனேடிய தொலைக்காட்சி ஒன்று, இந்தியாவில் வாழும் ஒரு குட்டிப்போராளியுடனான பேட்டி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது.
அப்படி அந்த சிறுமி செய்த செயல்தான் என்ன? லிசிப்ரியா கங்குஜம் (Licypriya Kangujam) என்னும் அந்த 9 வயது சிறுமி, ஒரு இளம் பருவநிலை ஆர்வலர்.
தன் உயிரையும் பணயம் வைத்து, தனக்கு பெற்றோர் கொடுத்த பணத்தையும், சமூக ஊடகங்கள் மூலம் சேகரிக்கும் பணத்தையும் இந்தியா முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக செலவிடுகிறார் லிசிப்ரியா.
குறிப்பாக, ஆக்சிஜன் இல்லாததால் பல கொரோனா நோயாளிகள் இறந்ததாக கேள்விப்பட்டதும் தான் மிகவும் கவலையடைந்ததாக தெரிவிக்கும் லிசிப்ரியா, அவர்களுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் வாங்குவதற்காக தன் பணத்தை செலவிடுவதாக தெரிவிக்கிறார்.
இதுவரை தான் 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கிறார் லிசிப்ரியா.
மழலை மாறாவிட்டாலும் கொரோனா நோயாளிகளுக்காக உயிரைப் பணயம் வைத்து களமிறங்கியிருக்கும் அந்த சிறுமியின் பேட்டியை இங்கு காணலாம்.