மணிக்கு 100 கி.மீ அதிகமான வேகம்.., சரக்கு ரயிலுக்கு 9,000 குதிரை திறனுடைய நவீன என்ஜின் அறிமுகம்
சரக்கு ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் இழுத்துச் செல்லும் திறன் கொண்ட 9,000 குதிரைத்திறன் (எச்பி) கொண்ட அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த ரயில் என்ஜின் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நவீன என்ஜின் அறிமுகம்
4,500 முதல் 5,000 டன் எடையுள்ள சரக்கு ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் இழுத்துச் செல்லும் திறன் கொண்ட 9,000 குதிரைத்திறன் (எச்பி) கொண்ட அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சினை அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தியா வெளியிட உள்ளது.
இந்திய மாநிலமான குஜராத்தில், தகோத் என்ற இடத்தில் உள்ள ரயில் என்ஜின் தொழிற்சாலையில், 9,000 குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கப்படுகிறது.
இந்த எஞ்சினானது 5,000 டன் எடையுள்ள சரக்கு ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் இழுத்து செல்லக்கூடியது. இதற்கான பணிகளை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "9,000 குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் முதல் என்ஜின் அடுத்த 30 முதல் 40 நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ரயில்வே துறையின் முக்கிய நோக்கமாகும். 2020 -ம் ஆண்டில், பீகாரின் மாதேபுராவில் உள்ள எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் தொழிற்சாலையில் 12 ஆயிரம் குதிரை திறன் கொண்ட இரட்டை ரயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த என்ஜின்கள் ஒற்றை எஞ்சின் மொடல்களை போலல்லாமல் இரண்டு என்ஜின்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
வரவிருக்கும் என்ஜின் இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜினாக இருக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |