தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த எலக்ட்ரிக் பைக் அறிமுகம்
மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட் மோட்டார்ஸ் குறைவான விலையில் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
எலக்ட்ரிக் பைக் அறிமுகம்
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ரிவோல்ட் மோட்டார்ஸ். இந்நிறுவனமானது ஆர்வி பிளேஸ் எக்ஸ் (RV BlazeX) எனும் இ-பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலையானது 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த மின்சார பைக்கில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.
இதில் 3.24 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4 kW வரையிலான ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். சார்ஜிங் நேரத்தை பொறுத்தவரை பூஜ்ஜியத்தில் இருந்து 80 % சார்ஜ் எட்ட 3.30 மணி நேரங்களும், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வெறும் 80 நிமிடங்களும் தேவைப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |