USB-C போர்ட் கொண்ட Apple Pencil அறிமுகம்..விலையும் மிகக்குறைவு
ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு விலை குறைந்த ஆப்பிள் பென்சில் யு.எஸ்.பி. சி (USB-C) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அம்சங்கள்
ஐபேட் பயனர்களை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பென்சிலில் பிக்சல் பெர்ஃபெக்ட் அக்யூரசி (Pixel perfect accuracy), லோ லேடன்சி (low latency) மற்றும் டில்ட் சென்சிடிவிட்டி (tilt sensitivity) ஆகிய வசதிகள் உள்ளன.
மேலும், இதனுடைய வடிவமைப்பு மிகவும் மெல்லியதாகவும், மேட் ஃபினிஷ் (Matte finish) மற்றும் மேக்னடிக் ஃபிளாட் சைட் (magnetic flat side) ஆகியவையும் உள்ளது. இதனை நாம் ஐபேட் -ன் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இதிலுள்ள USB-C போர்ட் ஐபேட் உடன் இணைந்து கொண்டு USB-C கேபிள் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் ஐ பேட் உடன் இணைத்ததும் Apple Pencil ஸ்லீப் நிலைக்கு செல்வதால் பேட்டரியை சேமிக்கலாம். மேலும், இதில் பிரெஷர் சென்சிடிவிட்டி (Pressure sensitivity) அம்சம் இல்லை.
விலை குறைவு
USB-C போர்ட் கொண்ட ஆப்பிளின் ஐபேட் அனைத்து மாடல்களிலும் இதை பயன்படுத்த முடியும். இந்திய சந்தையில் Apple Pencil USB-C மாடலின் விலை ரூ.7,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மட்டும் இதனை ரூ.1,000 குறைத்து 6,900 ரூபாய்க்கு வாங்க முடியும். இதன் விற்பனையானது அடுத்த மாத துவக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |