இளவரசர் வில்லியம் வீட்டில் நிகழ்ந்த பாதுகாப்புக் குளறுபடி: நிபுணர்கள் கேள்வி
பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான வில்லியம் வீட்டிற்குள் ஒரு நபர் இரண்டு முறை நுழைந்த விடயம், பாதுகாப்பு தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இளவரசர் வீட்டுக்குள் நுழைந்த நபர்
கடந்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, முதுகில் பெரிய பையுடன் வந்த டெரக் (Derek Egan, 39) என்னும் நபர், இளவரசர் வில்லியம், கேட்டின் வீடான கென்சிங்டன் மாளிகைக்குள் தன் பையை தூக்கி வீசிவிட்டு, சுவரில் ஏறியுள்ளார்.

அவரை கைது செய்த பொலிசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். டிசம்பர் 23ஆம் திகதி, மீண்டும் அவர் கென்சிங்டன் மாளிகைக்குள் நுழைந்துள்ளார். அப்போதும் அவரை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி
நிபுணர்கள் கேள்வி
இந்நிலையில், இளவரசர் வில்லியம் வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்த விடயம் குறித்து பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது சீரியஸான கவலையை ஏற்படுத்தும் விடயம் என்று கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரியான Dai Davies என்பவர், அந்த நபர் இளவரசர் வீட்டுக்குள் நுழைந்தப்போது, ராஜகுடும்பம் எவ்வளவு ஆபத்திலிருந்தது என்பது குறித்து பொலிசார் ஆராயவேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஒருவர் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் இளவரசர் வீட்டுக்குள் நுழைந்த விடயம் கவலையை ஏற்படுத்தும் விடயம் என்று கூறியுள்ள அவர், இளவரசர் வீட்டுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட அவருக்கு எப்படி ஜாமீன் கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |