20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?
20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பது தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரின் கருத்து. கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.
தங்கத்தின் மதிப்பு
இப்போது நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகை வாங்கி இருந்தால் அவற்றின் இன்றைய மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.585 ஆகும். அதன்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.5850 ஆகும். ஆனால் தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 74,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மே 21 -ம் தேதி நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 74, 220 ரூபாயாக இருந்தது. அந்தவகையில, 1 கிராம் தங்கத்தின் அப்போதைய விலை ரூ. 585 ரூபாயையும், தற்போதய விலையான ரூ. 7,422 ரூபாயையும் பார்த்தால் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
அதாவது, 20 வருடத்திற்குள் தங்கத்தின் விலை 13.5% உயர்ந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, 20 வருடத்திற்கு முன்பு, நீங்கள் 1 லட்ச ரூபாய்க்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், தற்போது அது ரூ.12.5 லட்சமாக மாறி இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |