கார் மற்றும் தங்கத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் 10 வருடங்களில் எதில் அதிக லாபம் கிடைக்கும்?
கார் மற்றும் தங்கத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் 10 வருட ரிட்டன் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கார் Vs தங்கம்
தங்கத்தின் விலை ராக்கெட் போல் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்களுக்கு தங்கமானது முக்கிய தேர்வாக மாறிவிட்டது.
10 வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ரூ.4 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் விலை 15 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
2025-ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுவே நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.4 லட்சத்திற்கு கார் வாங்கியுள்ளீர்கள் என்றால் இன்று அதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே இருந்திருக்கும்.
செகண்ட் ஜெனரேஷன் மாருதி ஆல்டோ K10 போன்ற வாகனங்கள் 2015ல் ஷோரூம் விலைப்படி 3.06 லட்சம் ரூபாய் என்றால், தற்போது இந்த கார் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய்க்கு விலை போகும்.
இது காரின் மைலேஜ், உரிமையாளர்களின் எண்ணிக்கை, காரின் தற்போதைய நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
இதுகுறித்து RPG எண்டர்பிரைசஸ் சேர்மன் ஹர்ஷ் கோயங்கா கூறுகையில், “10 வருடங்களுக்கு முன்பு நான் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு கார் வாங்கினேன். அதேபோல என் மனைவி 8 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கினார். ஆனால், இன்று காரின் மதிப்பு 1.5 லட்சம். ஆனால், தங்கத்தின் விலை ரூ.32 லட்சம்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |