ரூ.500 முதலீடு செய்தால் போதும்.. அதிக வட்டி தரும் SBI-ன் பென்ஷன் திட்டம்
ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ ரூ. 500 முதலீடு செய்யும் எஸ்.பி.ஐயின் பென்ஷன் திட்டத்தை தான் பார்க்க போகிறோம்.
அது என்ன திட்டம்
நாம் எல்லோருக்கும் வயதான காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சனையே காசு தான். பெற்ற பிள்ளைகள் கூட இந்த காலத்தில் பெற்றோரை வயதான காலத்தில் கவனிப்பதில்லை.
சிலருக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அது கவிழ்த்துவிடும் என்ற பயம் இருக்கிறது. அதனால் தான், பெரும்பாலானோர் பென்சன் திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
இதில் முக்கியமானது என்னவென்றால், சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுத்தால் தான் வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். அதற்கு, பல ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில், அதிக வட்டி விகிதத்தை தரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
யார் இதனை தொடங்கலாம்?
எஸ்.பி.ஐ-ன் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) வி.ஆர்.எஸ் என்ற விருப்ப ஓய்வு பெற்றவர்கள் சேரலாம். மேலும், இந்த திட்டமானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது.
மேலும், SBI வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் ஃபண்ட் திட்டத்தின் மூலம் 40 வயது உடையவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
ரூ.500 முதலீடு செய்தால் போதும் மியூசிச்சுவல் பண்டில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்தால் அது மேலும் நம்பிக்கை அதிகரிக்கக்கூடியதாகவும், டபுள் மடங்கு லாபத்தை அளிக்க கூடியதாகவும் இருக்கும்.
இந்த திட்டத்திற்கு ரூ.500 முதலீடு செய்தால் போதும். மேலும், ஆண்டுக்கு அதிகபட்ச தொகை ரூ.5,000 ஆகும். இதனை நீங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் சிறந்த பென்சன் தொகை கிடைக்கும்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த பண்டின் சொத்து மதிப்பானது ரூ.778.69 கோடியாக இருக்கிறது. இந்த திட்டத்தில் எந்த ஒரு வெளியேறும் கட்டணமும் கிடையாது. மேலும், ஆண்டுக்கு சராசரியாக 22.44% ஆண்டு வருமானத்தை வழங்குகிறது.
அதுமட்டுமல்லாமல், மியூச்சுவல் பண்ட் திட்டம் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை தான். அதனால், இதில் முதலீடு செய்வதற்கு முன்பு ஆலோசகரிடம் முழுமையாக விசாரித்து, உங்களுக்கு சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |